1777281 renuka
விளையாட்டு

பெண்கள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி! 65 ரன்னில் வென்றது இந்தியா

Share

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

#Cricket #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1727583710 Sanath Jayasuriya L
செய்திகள்விளையாட்டு

சனத் ஜயசூரியவின் அதிரடி முடிவு: 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகல்!

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான்...

images 7
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணத்திற்காகத் தயாராகும் SSC மைதானம்: 1.7 பில்லியன் ரூபா செலவில் நவீனமயமாக்கல்!

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்காக, கொழும்பு சிங்களீஸ்...

images 4
விளையாட்டுசெய்திகள்

டுபாயில் புத்தாண்டை வரவேற்ற கிங் கோலி: வைரலாகும் அனுஷ்காவுடனான கியூட் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, தனது 2026-ம் ஆண்டு புத்தாண்டை மனைவி அனுஷ்கா சர்மா...

25 6955720d874a0
விளையாட்டுசெய்திகள்

நீருக்கு அடியில் ஒரு சதுரங்கப் போர்: உலக டைவிங் செஸ் போட்டியில் நெதர்லாந்து வீரர்கள் சாதனை!

நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில்,...