DSC 1234
இலங்கைசெய்திகள்பிராந்தியம்விளையாட்டு

வடக்கின் பெரும் போர்! – சென். ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றி

Share

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குமிடையிலான 115ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்போட்டியில் சென்ஜோன்ஸ் கல்லூரி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி 84.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கரிசன் 41 ஓட்டங்களையும் அணித்தலைவர் அபிசேக் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் விதுசன் மற்றும் கவிதர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது முதல் இனிங்சில் 45 ஒவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

மத்திய கல்லூரி சார்பில் சாரங்கன் 41 ஓட்டங்களையும், அஜய் 28ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் விதுசன் 6 விக்கெட்டுகளையும், அஸ்நாத் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

42 ஓட்டங்கள் முன்னிலையோடு இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி அணி 67 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. (டிக்ளே செய்தது)

துடுப்பாட்டத்தில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் சபேசன் 105 ஜெபனேசர் ஜேசியல் 35, சுகீதன் 34 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பில் நியுட்டன் 3 விக்கெட்டுகளையும், கௌதம் 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

262 ஓட்டங்களை இலக்காக் கொண்டு இரண்டாம் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி 62.3 ஓவர்கள் 163 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

மத்திய கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் கஜன் 53 ஓட்டங்களையும், சாரங்கன் 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்

பந்துவீச்சில் சென்ஜோன்ஸ் கல்லூரி சார்பில் அஸ்நாத் 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயனாகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் சதத்தினை பூர்தி செய்த சென்ஜோன்ஸ் கல்லூரி வீரர் சபேசன் தெரிவுசெய்யப்பட்டார்.

சிறந்த பந்துவீச்சாளராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி வீரர் அஸ்நாத் தெரிவுசெய்யப்பட்டார்

சிறந்த களத்தடுப்பாளராக மத்திய கல்லூரி வீரர் சன்சயன் தெரிவுசெய்யப்பட்டார்.

போட்டியின் சகலதுறை ஆட்டக்காரனாக மத்திய கல்லூரி வீரர் கஜன் தெரிவுசெய்யப்பட்டார்.

சிறந்த விக்கெட் காப்பாளராக மத்திய கல்லூரி வீரர் சாரங்கன் தெரிவு செய்யப்பட்டார்.

DSC 1219 DSC 1197 DSC 1110 DSC 1200 DSC 1205 DSC 1203 DSC 1201 DSC 1206

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...