இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியன் ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் முதல் சுற்றில் கலந்துகொண்டார் சானியா மிர்சா, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா கிச்னோக் இணை அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி – ஸ்டோர்ம் சான்டெர்ஸ் ஜோடியுடன் மோதியது.
இதில் சானியா மிர்சா ஜோடி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து சானியா மிர்சா டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (19) அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
இனி நான் விளையாடப்போவதில்லை. இதற்கு சில காரணங்கள் இருக்கிறது. காயத்திலிருந்து முன்பைப்போல் மீண்டு வர எனது உடல் ஒத்துழைக்கவில்லை. எனது உடல் அதன் வலுவை இழக்க தொடங்கியிருக்கிறது.
நான் எங்கு சென்றாலும் எனது 03 வயது மகனை அழைத்து செல்லவேண்டியுள்ளது. மகனின் ஆரோக்கியத்தை அபாயத்திற்குள்ளாக்குகிறேன். எனது உடல் எடையைக் குறைத்து, இளம் தலைமுறை தாய்மார்களுக்கு முன்மாதிரியாக திகழ்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வரும் சானியா மிர்சா, இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
மேலும் 14 ஆவது அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கும் சானியா மிர்சா 19 வருடங்களாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SportsNews
Leave a comment