Royal Challengers scaled
விளையாட்டுசெய்திகள்

IPL 2021-பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது றோயல் சேலஞ்சர்ஸ்

Share

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மோதியது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 164 ரன்கள் எடுத்தது.

அதில் முதல் இலக்கில் 67 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்சின்  பந்துவீச்சில் கோலி, படிக்கல், கிறிஸ்டியன் அடுத்தடுத்து வெளியேறினர்.  பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் அடித்தார்.

பின் களம் இறங்கிய டிவில்லியர்ஸ்ம்  தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள் அடித்தார்.  கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய சமி 3 இலக்குகளை வீழ்த்தினார்.  இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.  சமி மற்றும் ஹென்ரிக்ஸ் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினர்.  முதல் இலக்கில் 91 ரன்கள் சேர்த்த நிலையில் கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்துகளில் 57 ரன்கள்அடித்து ஆட்டமிழந்தார் .  அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் ரன்கள் களமாட  தவறினர்.  இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்து தோல்வியுற்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...