பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 164 ரன்கள் எடுத்தது.
அதில் முதல் இலக்கில் 67 ரன்கள் சேர்த்தது. ஹென்ரிக்சின் பந்துவீச்சில் கோலி, படிக்கல், கிறிஸ்டியன் அடுத்தடுத்து வெளியேறினர். பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 57 ரன்கள் அடித்தார்.
பின் களம் இறங்கிய டிவில்லியர்ஸ்ம் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள் அடித்தார். கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய சமி 3 இலக்குகளை வீழ்த்தினார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சமி மற்றும் ஹென்ரிக்ஸ் தலா 3 இலக்குகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடினர். முதல் இலக்கில் 91 ரன்கள் சேர்த்த நிலையில் கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 42 பந்துகளில் 57 ரன்கள்அடித்து ஆட்டமிழந்தார் . அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் ரன்கள் களமாட தவறினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் அடித்து தோல்வியுற்றது.
Leave a comment