FFdTpzwVgAMYcvG
செய்திகள்விளையாட்டு

IPL2022 ன் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்

Share

2022ஆம் ஆண்டு IPLலின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விபரங்களை இந்தியன் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.

IPL 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தை மாதத்தில் நடைபெறவுள்ளது.

அதன் ஏலத்திற்கு முன் அணிகள் தங்கள் பழைய வீரர்களில் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும் என்பது IPL லின் நியதியாகும்.

இந் நிலையில் IPLலின் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பற்றிய விபரங்களை இந்தியன் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா 3 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் 2 பேரையும் தக்கவைத்துள்ளன.

தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களும் அவர்களுக்குரிய ஏலத்தொகைகளும் விபரம் பின்வருமாறு..

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ரவீந்திர ஜடேஜா – ₹16 கோடி
எம்.எஸ். தோனி – ₹12 கோடி
மொயீன் அலி – ₹8 கோடி
ருதுராஜ் கெய்க்வாட் – ₹6 கோடி
மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா – ₹16 கோடி
ஜாஸ்பிரீத் பும்ரா – ₹12 கோடி
சூர்யகுமார் யாதவ் – ₹8 கோடி
கைரன் பொலார்ட் – ₹6 கோடி
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி – ₹15 கோடி
கிளென் மேக்ஸ்வெல் – ₹11 கோடி
மொஹமட் சிராஜ் – ₹7 கோடி
டெல்லி கேபிடல்ஸ்:

ரிஷப் பந்த் – ₹16 கோடி
அக்சர் படேல் – ₹9 கோடி
பிரித்வி ஷா – ₹7.50 கோடி
அன்ரிச் நோர்க்கியா – ₹6.50 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஆண்ட்ரே ரஸல் – ₹12 கோடி
வருண் சக்ரவர்த்தி – ₹8 கோடி
வெங்கடேஷ் ஐயர் – ₹8 கோடி
சுனில் நரைன் – ₹ 6 கோடி
பஞ்சாப் கிங்ஸ்:

மயங்க் அகர்வால் – ₹12 கோடி
அர்ஷ்தீப் சிங் – ₹ 4 கோடி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் – ₹14 கோடி
அப்துல் சமத் – ₹4 கோடி
உம்ரான் மாலிக் – ₹ 4 கோடி
ராஜஸ்தான் ரோயல்ஸ்:

சஞ்சு சாம்சன் – ₹14 கோடி
ஜாஸ் பட்லர் – ₹10 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ₹4 கோடி

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...