LPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.
இத் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.
இதையொட்டி இப் பதிவுகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளன.
இத் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தம் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தமது நாட்டின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கவேண்டும்.
அத்துடன், முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவராக இருக்கவேண்டும். T-20 தொடருக்கான அணியில் இடம்பெற்றவராக இருக்க வேண்டும் என்பது கட்டாய தகுதியாகும்.
இந்த தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 20 வீரர்கள் விளையாட உள்ளளர்.
LPL அணியில் பங்கு பெறும் 20 வீரர்களில் 14 பேர் உள்ளூர் வீரர்களாகவும் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருப்பார்களென்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment