T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்கவுள்ள தமது அணி வீரர்களின் விபரத்தை ஒவ்வொரு நாடும் வெளியிட்டு வருகின்றது,
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, T20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியை நேற்று (09) அறிவித்தது.இந்த அணிக்கு ரஷித் கான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டதுடன், அணியில் மாற்று வீரர்கள் இருவர் உட்பட மொத்தமாக 20 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
T20 உலக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்படட சில நிமிடங்களில் அணியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என ரஷித் கான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .
அணித்தலைவர் எனும் வகையில் உலகக்கோப்பை அணி தெரிவு செய்யப்படும் போது என்னிடம் ஆலோசனை செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. எனவே நான் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் புதிய தலைவராக முஹமது நபி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a comment