விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் விறுவிறுப்பாக விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 166 இலக்கை பஞ்சாப் கிங்ஸ் 19.3 ஓவர்களில் அடைந்து வெற்றியீட்டியது.
தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் இரண்டு ஆறு ஓட்டங்கள்,ஒரு நான்கு ஓட்டம் உள்ளடங்கலாக, 22 ஓட்டங்களைப் பெற்று போட்டியை வெற்றியோடு முடித்து வைத்தார்.
தமிழக வீரர் ஷாருக்கானின் ஆட்டத் திறமை தொடர்பில், பஞ்சாப் அணியின் தலைவர் லோகேஸ் ராகுல் தெரிவிக்கும் போது,’
வலை பயிற்சியில் ஷாருக்கான் பிரமாதமாக துடுப்பெடுத்தாடினார். முதல்கட்ட போட்டியிலேயே அவர் எவ்வளவு வலுமிக்கவர் என்பதை பார்த்தோம்.
கடினமாக உழைக்கும் அவர் பயிற்சியின் போது துடுப்பாட்ட பயிற்சியாளரிடம் நிறைய கேள்விகளை கேட்டு தனது ஆட்டத்திறனை மெருகேற்றி கொள்கிறார்.
அவரால் பந்தை நீண்ட தூரம் அடிக்க முடியும் என்பதை அறிவோம். இதே போல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க கூடிய திறமையும் அவரிடம் உண்டு.
அந்த பணியை ஏற்கனவே தமிழக அணிக்காக செய்திருக்கிறார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
Leave a comment