1781226 koli1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி

Share

உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றிப் பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் இந்தியா அணி சார்ப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டிய ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்ப்பில் ஷான் மசூத் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், இப்திகார் அஹமட் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணிக்கு 160 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

பந்துவீச்சில் ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்ப்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டிய 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

அதனடிப்படையில் இந்தியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அணி வெற்றி பெற்றுள்ளது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...