ஐ.பி.எல் ஏலத்தில் ரெண்யாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.
15-வது ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 204 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிகபட்ச விலையாக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலம் போனார்.
ஆனால் சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை .
இதனால் மனமுடைந்த அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிஸ்டர் ஐ.பி.எல் என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கி தங்களது வருத்தங்களையும் பதிவிட்டனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், ரெய்னாவை ஏலம் எடுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில அவர் கூறியதாவது:
சி.எஸ்.கே. அணியின் முக்கிய வீரராக கடந்த 12 ஆண்டாக சுரேஷ் ரெய்னா திகழ்ந்து வந்தார். இவரை ஏலம் எடுக்காதது எங்களுக்கு வருத்தமே.
அணியின் தேவையை கருத்தில்கொண்டே ஏலத்தில் செயல்பட முடியும். அணியின் தேவைதான் முதன்மையானது என அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த உத்தேச அணியில் சுரேஷ் ரெய்னாவின் தேவை இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே அவரை வாங்கவில்லை. டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடத்தை நிரப்புவது நிச்சயம் எளிதல்ல என தெரிவித்தார்.
சுரேஷ் ரெய்னா இதுவரை 205 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5,528 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம் உள்பட 39 அரைசதங்கள் அடங்கும். மேலும், ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#SportsNews