இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சங்கம் மற்றும் அரசாங்கம் என்பன 150,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை வழங்க முன்வந்ததையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், தினமும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், இரவு 9 மணி மற்றும் காலை 6 மணி வரை வெளியில் செல்ல தடை உள்ளிட்ட பிணை நிபந்தனைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், டிண்டர் உள்ளிட்ட டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment