Netherlands Squad
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை! ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது நெதர்லாந்து அணி

Share

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது.

தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அனல் பறந்த போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றியை ஈட்டியது.

#T20WorldCup #Cricket

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11908 31 10 2024 12 33 27 3 DSC 4882
விளையாட்டுசெய்திகள்

இந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி: கம்பீரின் எதிர்காலம் குறித்த கேள்விக்குக் கம்பீர் பதில்! 

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைச் சொந்த...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

MediaFile 3 2
விளையாட்டுசெய்திகள்

ஐபிஎல் 19ஆவது சீசன் மினி ஏலம் அபுதாபியில் நடத்தத் திட்டம்! – டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்ப்பு!

19ஆவது ஐ.பி.எல். (IPL) தொடர் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வீரர்களின் மினி...