Netherlands Squad
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை! ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது நெதர்லாந்து அணி

Share

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கியது.

தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அனல் பறந்த போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றியை ஈட்டியது.

#T20WorldCup #Cricket

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 140
செய்திகள்விளையாட்டு

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த இளம் வீரர்: தடகள உலகில் புதிய வரலாறு படைத்தார் கௌட் கௌட்!

ஆஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜாம்பவான் உசைன் போல்ட்டின் நீண்டகால...

world 103
விளையாட்டுசெய்திகள்

மதீஷா பத்திரானா உடற்தகுதி தேர்வில் வெற்றி: கேகேஆர் அணியில் இணைய பச்சைக்கொடி!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா, இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடத்திய...

world 64
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்: முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; தோல்வியிலும் 3வது இடத்தில் ஆர்சிபி!

ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 6...

Untitled 78
விளையாட்டுசெய்திகள்

எஃப்.ஏ கிண்ணத்திலிருந்து ஆர்சனல் வெளியேற்றம்: அரையிறுதிக்கு முன்னேறியது மன்செஸ்டர் சிற்றி!

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (FA Cup) சவால் கிண்ணத் தொடரின் பரபரப்பான காலிறுதிப் போட்டியில், பலம்...