rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Share

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவருக்கு எதிரான விசாரணைகளை ஜூலை மாதம் மீண்டும் முன்னெடுக்கக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜித சேனாரத்ன மீன்பிடி அமைச்சராக இருந்தபோது, கொரிய நிறுவனமொன்றுக்கு மணல் அகழ்வுத் திட்டத்தை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் வழக்குப் பதியப்பட்டது.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித சேனாரத்னவுக்கு, கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கக் கால அவகாசம் கோரினர்.

அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், வழக்கினை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் திகதியிட்டார். அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...