win scaled
விளையாட்டுசெய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது !

Share

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட்டில்  47-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளஸ்சிஸ் களமிறங்கினர். 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டு பிளஸ்சிஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரெய்னா 3 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகியதுடன் அடுத்து வந்த மொயீன் அலி 21 , ராயிடு 2 ரன்னிலும்  அவுட் ஆகி வெளியேறினார்.  மறுமுனையில் தொடக்க வீரர் கெய்க்வாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது.
60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உள்பட 101 ரன்கள் குவித்த கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு உறுதுணையாக 15 பந்துகளில் 32 ரன்கள் குவித்த ஜடேஜா களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இயன் லிவிஸ் மற்றும் ஜெய்ஷ்வால் களமிறங்கினர்.
இயன் லிவிஸ் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால், மறுமுனையில் ஜெய்ஷ்வால் அரைசதம் விளாசினார். அவர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து கேஎம் ஆசிப் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
களமிறங்கிய ஷிவம் துபே கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். சஞ்சு சாம்சன் 28 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் விளாசினார்.
இறுதியில் 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....