image 500ea8af0b
செய்திகள்அரசியல்இலங்கை

எதிர்கட்சித் தலைவரின் விசேட அறிவிப்பு!!

Share

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ‘ஒமிக்ரோன்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை ஏற்றியிருந்தாலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

டெல்டாவைவிட ஆபத்தாகக் கருதக்கூடிய ஒமிக்ரோன் பிறழ்வு எமது நாட்டுக்குள் பரவும் அபாயமும் இருக்கின்றது. எனவே, இதனை தடுப்பதற்கு சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தற்போது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது ஆனால் ஒரு வயது பகுதியினருக்கு மாத்திரமே இது வழங்கப்படுகிறது. எனவே அரசாங்கம் முன்வந்து தடுப்பூசி கிடைக்கபெறாத அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...