20211118 130632 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடல்வழி பயண சுற்றுலா சேவை – யாழில் ஆரம்பம்

Share

சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இதுவரை காலமும் இல்லாத கடல்வழி பயண சேவையொன்று யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

எட்டுப் பேர் தங்கக்கூடிய நான்கு அறைகளைக் கொண்ட பாய்க்கப்பல் வடிவிலான இயந்திர ரக கப்பலில்
ஒருநாள் மற்றும் சில நாட்கள் கடலில் பயணிக்கக்கூடிய வகையில் இந்த சேவை பரீட்சார்த்தமாக டிசெம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகரில் இருந்து இதனை இந்த மாதத்தில் ஆரம்பிக்க இருந்தோம். ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரை பரீட்சார்த்தமாக
ஆரம்பிக்கவுள்ளோம்.

இதன் மூலம் அந்நியச் செலாவணி அதிகரித்து நாட்டிற்கு வருமானம் ஈட்டப்படுவதுடன் உள்ளூர்வாசிகளும் பயன்பெறுவர் – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...