WhatsApp Image 2021 12 21 at 12.01.27 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி!!

Share

பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை நகரிலுள்ள மேலதிக வகுப்புக்கு கடந்த 19 ஆம் திகதி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயால் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்று அவரின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை கோபோ பகுதியில் நீர் நிலையொன்றின் அருகில் ( தெப்பக்குளம்) இருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் இடம்பெற்று,  இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...