siril G 1000px 8 11 21
செய்திகள்அரசியல்இலங்கை

மீண்டும் நாளை வாக்குமூலம் வழங்கவுள்ள அருட்தந்தை சிறில் காமினி!

Share

அருட்தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் இன்று ஆஜராகி வாக்குமூலம்  வழங்கியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்களுடன் இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அருட் தந்தை சிறில் காமினி உட்பட சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில்  அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதனடிப்படையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைக்கு  அவரை ஆஜாராகும்படி இரண்டு தடவைகள்  அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் அவர் ஆரஜாரகவில்லை.

அவர் அதற்கு கால அவகாசம் கோரிய நிலையில், இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு 1 இன் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கமைய சிறில் காமினி ஆஜாராகினார்.

மேலும், 7 மணித்தியாலயங்கள் தொடர் விசாரணையின் பின்னர் மீண்டும் நாளை சிறில் காமினி வாக்குமூலம் வழங்கவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...