நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாப்பரசர் லியோ இந்தச் சம்பவம் குறித்துத் தெரிவித்ததாவது:
“கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.”
குறித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த ஆயுதக் குழுவினரும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்டவர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகப் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடத்தப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் ஆயுதக் குழுவினரின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.