M.K.Stalin
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி

Share

இந்தியா தமிழகத்தில் முன்பள்ளி, அங்காடிகள் உள்ளடங்கலாக பல பொது இடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்கப்படாத நிலையில், குறித்த 3 நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பாரதிய ஜனதாக் கட்சியினர் கடந்த வாரம் இவ்வாறு போராட்டம் நடாத்தினர்.

அத்துடன் விஜயதசமி நாளான நாளை கோயில் திறக்கப்பட வேண்டும் என, கோவையைச் சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது இவ்விடயம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார் என அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய முதலமைச்சரின் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்ததுடன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில், அதற்கு அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும், முன்பள்ளி, அங்காடிகள் முழுமையாக இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...

Romance Scams in Canada 1024x560 1
செய்திகள்உலகம்

கனடா ஒன்றாரியோவில் மோசடிகள் அதிகரிப்பு: நோர்த் பேயில் ஒருவரிடம் $250,000 மோசடி – காவல்துறை எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த...

images 9
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலில் இரசாயனம் கலந்த நீர்த்தாரை தாக்குதல்: 3 இலங்கை பணியாளர்கள் பாதிப்பு – பாதுகாப்பிற்கு தூதரகம் கோரிக்கை!

இஸ்ரேலில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இரசாயனம் கலந்த நீர்த்தாரைப் பிரயோகத்தின் (Chemical Spray/Water...

images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...