முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரபுகளின் பயணத்திற்காக வாடகைக்கு பெறப்பட்ட இலகுதர விமானத்துக்கு இலங்கை விமானப்படைக்கு 2000 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகங்கள் உட்பட 10 அரசு நிறுவனங்கள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்களால் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இதன்படி, 2003 – 2013 ற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை விமானப்படையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட இலகுதர விமானங்களுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையும், 2013-2018ற்கு இடையில் பெறப்பட்ட விமானங்களில் மேலும் 6 மில்லியனுக்கும் அதிகமான தொகையும் செலுத்தத் தவறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகை இதுவரை இலங்கை விமானப்படைக்கு செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்கவைத் தொடர்பு கொண்டபோது, 2003 மற்றும் 2013 ஆம் ஆண்டு வரையில் கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்காக இலங்கை விமானப்படை 6 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்தாமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
2013-2018 காலப்பகுதியில் இலங்கை விமானப்படையிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட விமானங்களுக்காக செலுத்த வேண்டிய மற்றுமொரு 6 மில்லியனுக்கும் அதிகமான நிலுவைத் தொகையை நிதியமைச்சிற்கு சமர்ப்பிப்பதற்கான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பணத்தை நிதியமைச்சகம் மீட்டு விமானப்படைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்தார்.
#SriLankaNews

