Mervin Silva
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றச்சாட்டை நிரூபித்தால் தண்டனை ஏற்கத் தயார்! – மேர்வின் சில்வா

Share

” களனி தேர்தலில் நான் அரசியல் செய்தேன். ஆனால், ஊழல் – மோசடிகளில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.” இவ்வாறு அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் எவரிடமும் பணம் வசூலிக்கவில்லை. கப்பம் பெறவில்லை. அரசியலில் ஈடுபட்டாலும் ஊழல்களில் ஈடுபட்டதில்லை. இது மக்களுக்கு தெரியும். நான் ஊழல் செய்துள்ளேன் என எவராவது நிரூபித்தால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்.

நான் வியாபாரி. பல வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். அதன்மூலமே எனக்கு பணம் கிடைத்தது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ச சிறந்த தலைவர். துட்டகைமுனு மன்னருக்கு பிறகு தென்பகுதியில் உருவான மிகவும் சிறந்த தலைவர். வெளிநாடுகளிடம் அடிபணியவில்லை. போரை முடித்தார். ஆனால் இந்த அரசு தற்போது பயணிக்கும் பாதையால் அத்தகையதொரு தலைவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. நான் மஹிந்தவுடன் இன்று இருந்திருந்தால் அவரையும் அழைத்துக்கொண்டி வெளியேறியிருப்பேன்.”- என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...