ஜப்பானின் புதிய பிராமராக ஃபுமியோ கிஷிடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பான் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் புதிய பிரதமராக அவா் மீண்டும் தேர்வு செய்யப்பட்டாா்.
அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கொரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்ற காரணத்தால் அவரின் பதவிக் காலம் முடிவதற்கு சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை இராஜிநாமா செய்தாா்.
அதன் பின் சுகாவுக்குப் பதிலாக ஃபுமியோ கிஷிடோ பிரதமரானாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற்றநாடாளுமன்றத் தோ்தலில் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது.
இதன் காரணமாக புதிய பிராமராக ஃபுமியோ கிஷிடோ மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#world
Leave a comment