image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

Share

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் குறித்து பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மயுர சமரகோன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியின் வருகையை அறிவிக்க முக்கிய இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சரியான நேரத்தில் வந்துவிட்டன. இளைஞர்கள், யுவதிகளின் மனதில் விதைக்கப்படும் தகவல் ஒவ்வொரு மணி நேரமும் ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆக அறிவிக்கப்பட்டது. இஷாராவின் வருகைக்காக மக்கள் காத்திருப்பதாகப் பல செய்திகள் வெளியிடப்பட்டன.

“அவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர். இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர்கள், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.”

காவல்துறை அதிகாரிகள் அவரிடம் பேசிய காணொளிகளில் மரியாதையாக ‘தங்கை’ என உரையாடியுள்ளனர்.

“நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத் தெரியாது. 96 இல் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தைக் கொண்டுவந்த அர்ஜுனவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.”

மேலும், “நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் கூட நடிக்கக் கூடும்,” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இதனால் பாதாள உலகில் ஈடுபட்டு பிரபலமடைந்து இறந்தாலும் பரவாயில்லை என்ற உணர்வு இளைஞர், யுவதிகளின் மனதில் விதைக்கப்படுகின்றது.

காவல்துறை அதிகாரிகள் அவரிடம் கதைத்த காணொளிகளில் மரியாதையாக தங்கை என உரையாடியுள்ளார்.

நாசாவில் வேலை செய்யும் இலங்கையர் வந்துபோவது அவரின் வீட்டு நாய்க்கு கூடத்தெரியாது. 96ல் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை கொண்டுவந்த அர்ஜுனவுக்கு கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.நாளைக்கு, இஷாரா ஒரு சோப்பு அல்லது கிரீம் விளம்பரத்தில் கூட நடிக்க கூடும் என விமர்சித்துள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...