இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான எருது ஆட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு என்பவை ஆண்டு தொடக்கத்தையொட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக குறித்த நிகழ்ச்சிகளுக்கு பொலிஸாரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் சில இடங்களில் கட்டுப்பாடுகளையும் மீறி எருதாட்டம், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கரியாம்பட்டி பகுதியில் நேற்றைய தினம் இளைஞர்கள் எருதுவிடும் நிகழ்ச்சியை நடத்துவதற்காக ஒன்று திரண்டனர்.
இதற்காக ஊரில் உள்ள எருதுகளை கோவிலைச் சுற்றி இளைஞர்கள் அழைத்து வந்தனர். எனினும் குறித்த நிகழ்ச்சிக்கு எதுவித அனுமதியும் பெறாத காரணத்தினால் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயில்பட்டி பொலிஸார் எருதுவிடும் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
#India
Leave a comment