மடு பிரதேசத்தில் பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளது.
மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.
சிலை காணப்பட்ட அதே இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்துக்கு அண்மையில் காணப்பட்ட மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில், முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.
தற்போது குறித்த பிள்ளையார் சிலையை அங்கிருந்து அகற்றியுள்ள விஷமிகள், அவ்விடத்தில் அந்தோனியார் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.
குறித்த விஷமிகளின் செயற்பாடு தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Leave a comment