இனந்தெரியாதவர்களால் பிள்ளையார் சிலை உடைத்து சேதம்…!!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக் குடிச்சாறு  சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாதவர்களால்  உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றள்ளது.
இப்பிள்ளையார் சிலை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடிச்சாறு சந்தியில குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது.
குறித்த பிள்ளையார் சிலையை பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மக்கள் வழிப்பாட்டுக்க்காக அமைத்துள்ளார்.
pillayar4 194x300 1
நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத நபர்கள்  உடைத்து சேதமாக்கியுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Exit mobile version