hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

‘பண்டோரா அக்கா’ – நிருபமா ராஜபக்சவுக்கு பெயர் சூட்டினார் ஹிருணிக்கா

Share

‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பண்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிருபமா ராஜபக்ச ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தால்கூட, அவர் பதுக்கிய பணம் 800 வருடங்களுக்கு போதுமானது. கொள்ளையடிப்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் குடும்பமும் அப்படிதான். இங்குள்ள வளங்களை, பணத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

2022 ஆம் ஆண்டுவரும்போது நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அன்றே நான் சொன்னேன். ஆனால் 2021 இலேயே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. தற்போது மக்கள் கொடுப்பாவிகளைதான் எரிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஆட்சியாளர்களையே தாக்குவார்கள் என்பது உறுதி.

நாட்டை சீரழித்த பின்னர் ராஜபக்சக்கள் அமெரிக்கா சென்றுவிடுவார்கள். இது உறுதி. நான் சொல்வதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ராஜபக்சக்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...