குழந்தைகள் பெற்றால் சொந்த வீடு! – அரசு அதிரடி
சீனாவில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சொந்த வீட்டு மானியம் அளிக்கப்படும் என சீனாவின் கன்சு மாகாணம் அறிவித்துள்ளது.
உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடான சீனா நாட்டின் சனத்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் அங்கு தற்போது சனத்தொகை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தற்போது அரசு பல்வேறு சலுகைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி சீனாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் கன்சு மாகாணம் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் 40 ஆயிரம் யுவான் ( இலங்கை மதிப்பில் சுமார் 12 லட்சத்து 40 ஆயிரம்) ரூபா பெறுமதியில் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதனைக் கொண்டு தம்பதியர் வீடு வாங்கலாம். அத்துடன் 3 வயதாகும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 10 ஆயிரம் யுவான் (இலங்கை மதிப்பில் சுமார் 3 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேலும் இதேபோல் 11 சலுகைகளை 3 குழந்தைகள் பெறும் தம்பதிகள் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment