Wanavasala Accident 4 1024x768 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரயில் மோதி கார் எரிந்து ஒருவர் சாவு!!

Share

யாழில் இருந்து கொழும்பு சென்ற உத்தரதேவி நகர்சேர் கடுகதி ரயிலுடன் வனவாசல ரயில் நிலையத்துக்கு அருகாமையில் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் இன்று நண்பகல் 12.45 க்கு குறித்த கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து காரணமாக கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காருக்கு ஏற்பட்ட பாரிய அளவிலான சேதங்கள் காரணமாக கார் தீப்பற்றியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ரயில் எஞ்சினின் முன் பகுதி கடும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...