France
செய்திகள்உலகம்

பிரான்ஸிக்குள் புகுந்தது ‘ஒமிக்ரொன்’

Share

பிரான்ஸிக்குள் ஒமிக்ரொன் புகுந்துள்ளதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமிக்ரொன் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரிவு அடைந்த புதிய ‘ஒமிக்ரொன்’ வகை கொரோனா முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, சவூதி அரேபியா, நைஜீரியா உள்ளிட்ட 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மற்றவகை கொரோனா வைரஸைவிட இது அதிகம் தாக்கும் திறன் உடையதென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பயணக் கட்டுப்பாடு, வைத்திய பரிசோதனைகள் என பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அமெரிக்காவில் நேற்று முதல்முறையாக’ஒமிக்ரொன் வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இந்தியாவிலும் இருவருக்கு ஒமிக்ரொன் வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் மாகாணப் பகுதியில் ஒருவருக்கு ‘ஒமிக்ரொன் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தொற்றுடையவர் நைஜீரியாவில் இருந்து வந்ததாகவும் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...