” மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அறிவிப்புகள் விளையாட்டுத்தனமானவை. அவை குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவியை துறந்து, அரசிலிருந்து வெளியேறுமாறு மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” எனது இளைய மகன் சிறுவயதில் என்னுடன் விளையாடுவார். அவர் விளையாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்னை சுடுவார். நானும் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுவேன். எனவே, சிறுபிள்ளைகளின் செயல் குறித்து நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அந்த தவறை தடுப்பதற்காகவே அமைச்சு பதவியைக்கூட பணயம் வைத்து போராடிவருகின்றோம்.” – என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment