download 9
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் புதிய வைரஸ்!

Share

இந்தியாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலால் 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தத் தவறினால், பெரியவர்களுக்கு பரவி மோசமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது கடந்த மே 6ஆம் திகதி முதன்முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் நெடுவத்தூர், ஆரியங்காவு, அன்சால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளும், 10 வயதுக்குட்பட்ட 26 சிறுவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு, சிக்குன்குன்யா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் சிறு கொப்புளங்கள் தோன்றும். இது சற்று பெரிதாகி தக்காளி போல சிவப்பாக தோன்றும். இதனாலேயே இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது தொற்றும் தன்மை கொண்டதாகும்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. உடல், மூட்டு வலி கடுமையாக இருக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருக்கும். அதேநேரம் இந்த காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...