duglas
செய்திகள்அரசியல்இலங்கை

மீன்பிடி முறைகளைத் தடுக்கும் புதிய சட்டம்!!

Share

தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறைகளைத் தடுக்கும் புதிய சட்டம் விரைவில் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் தீங்கிளைக்கும் வகையிலான மீன்பிடி முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் மீன்வளம் விரைவில் குறைந்துவிடும் என இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.

மீன் குஞ்சுகள் மாத்திரமன்றி மீன்களின் முட்டைகளும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் மீன்பிடி முறைகள் அச்சுறுத்தலானவை என்றும், இவற்றைத் தடுத்து நிறுத்தும் வகையில் விரைவில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடியில் ஈடுபட்டுள்ள படகுகளை இலகுவில் அடையாளம் காணக்கூடிய வகையில் பல்வேறு வர்ணங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்

அதேநேரம், தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ள பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

இத்திட்டத்துக்கு நிதி உதவியளிக்கவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கி தனது உதவியை நிறுத்தியிருப்பதால், வேறு தரப்பினரின் உதவியைப் பெற்றுக் கொள்ளவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கில் பருத்தித்துறை உட்பட ஐந்து மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும்,தெரிவித்தார்

தேவைப்படின் பருத்தித்துறை துறைமுகத்தை அரச தனியார் கூட்டாண்மையின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் உள்ள மீன்பிடிக் கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், மீன்பிடிக் கிராமங்களில் புதிதாக வீடுகளை அமைப்பது தொடர்பில் வீடமைப்பு இராஜாங்க அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் கூறினார்.

அதேநேரம், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.

கடற்றொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அமல் சிந்தக, கருணாதாச கொடித்துவக்கு, அஜித் ராஜபக்ஷ, அசங்க நவரட்ன, சிவநேசத்துரை சந்திரகாந்தன், கலாநிதி சுரேன் ராகவன், சுதத் மஞ்சுள ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....