யாழ். நாகர்கோவில் படுகொலை27ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ்.வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்கள் உள்ளிட்ட 39 பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் தினமே நேற்று நினைவேந்தப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தி, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்தார்.
1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விமானப்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான குண்டுதாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் கொல்லப்பட்டனர் .
அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment