12 39
இந்தியாசெய்திகள்

7வது முறையாக நிச்சயமாக திமுக தான் ஆட்சி அமைக்கும்- முதல்வர் மு. க. ஸ்டாலின்

Share

7வது முறையாக நிச்சயமாக திமுக தான் ஆட்சி அமைக்கும்- முதல்வர் மு. க. ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆளுநர், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜயை விமர்சித்த உரையாற்றினார்.

பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள்.

பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள்.

திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம்.

1949ல் திமுக தொடங்கப்பட்ட நிலையில் 1957ல் தான் தேர்தல் களத்தை சந்தித்த வளர்த்தெடுக்க இயக்கம் தி.மு.க.

1957ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962ல் 50க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது திமுக.

ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் திமுக தொடங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம்.

தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை.

திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது.

மதத்தை மையமாக வைத்து பேசும் ஆளுநரால் திமுக மேலும் வளருகிறது. திமுகவுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

7வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....