IMG 20211122 WA0001
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நினைவேந்தல் தடை – சாவகச்சேரி நீதிமன்றால் வழக்கு தள்ளுபடி

Share

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால் சாவகச்சேரி நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி இன்று (22) சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிவான் யூட்சன், பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், நாட்டின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் தொடர்பாக தெளிவாக அறிந்திருப்பார்கள்.

எனவே அவர்கள் சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.

பெயர் குறிப்பிட்ட நபர்களும் ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால், அவர்களை கைதுசெய்து மன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால் குறித்த நபர்களுக்கு எதிராக தடையுத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்து குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி சதீஸ்வரன், சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

chava.cou

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...