ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் நீக்கப்பட்டுள்ளார்.
2022 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டை ஆதரிப்பதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும், கட்சி தலைவரைத்தவிர ஏனைய நால்வரும் கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டு பாதீட்டை ஆதரித்தனர்.
இதனையடுத்து அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தௌபீக் நீக்கப்பட்டுள்ளார்.
அவர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றார்.
#SriLankaNews
Leave a comment