பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்புக்கு அமைதியான முறையில் பேரணியாக வரும் இரு பெண்களுக்கு பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இரு பெண்களுக்கும் நேற்று (12) களுத்துறையிலும் பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மொரட்டுவையிலிருந்து இன்று (13) காலை மீண்டும் கொழும்பு நோக்கிய பாதயாத்திரை அமைதியான முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அங்குப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment