நீதிமன்றில் முன்னிலையான விமல்
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 2016ஆம் ஆண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது.
இதில் அவர் முன்னிலையாகாத நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளார்.
Leave a comment