இறக்குமதியாளர்களால் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை முன்னணி சீனி இறக்குமதியாளர்களால் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சீனி ஒரு கிலோவின் விலை 220 தொடக்கம் 245 வரை விற்கப்பட்டது.
இந் நிலையில் அரசாங்கத்தால் ஒரு கிலோகிராம் சீனியின் கட்டுப்பாட்டு விலை 122 ரூபா என வர்த்தகமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டது.
அவ்வாறு இருந்தும் பல கடைகளில் சீனியின் விலை 140 தொடக்கம் 165 ரூபா வரை விற்பனை செய்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
அரசாங்கத்தினால் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சந்தையில் வெள்ளை சீனி இல்லை முடிந்துள்ளதாகவும் சிவப்பு சீனி மாத்திரமே காணப்படுவதாகவும் சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு தொகை வெள்ளை சீனி மீட்கப்பட்டதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஆயினும் அரசாங்கத்தால் இறக்குமதியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமாயின் சந்தையில் சீனியின் விலை 150 தொடக்கம் 200 வரை விற்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
#SriLankaNews
Leave a comment