ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

தீர்வை வென்றெடுக்க ரணிலுடன் பேசுவோம்! – சம்பந்தன் தெரிவிப்பு

Share

“தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே, அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசு மேற்கொள்ளும் சகல நடவடிக்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்பது இதன் மூலம் அர்த்தமாகாது. எனினும், மக்களின் நலனுக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கும்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். அவருக்கு வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை குறித்து நன்கு தெரியும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காண்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடாக இலகுவானது.

பலமான அரசைக் கட்டியெழுப்பிய பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி தீர்வு காணப்படும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...