Sritharan
அரசியல்இலங்கைசெய்திகள்

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஒருபோதும் ஏற்க மாட்டோம்! சிறீதரன் எம் பி தெரிவிப்பு.

Share

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவினை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் குறிப்பாக விக்னேஸ்வரன் ஐயா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளி வந்திருக்கின்றன அது தொடர்பிலே பல்வேறுப்பட்ட கருத்துக்கள் நியாயங்கள் எங்களிடம் கேட்கப்படுகின்றது

குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள் அது தொடர்பில் நாங்கள் டலஸ் அழக பெரும அவர்களுக்கு எழுதிக் கொடுத்த விடயங்களையே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்தபோதும் இந்த விடயங்களை அவருக்கு கூறி இருக்கின்றோம்

தமிழ் மக்கள் அன்றாடம் சந்தித்து வருகிற முக்கியமான பிரச்சனைகளான அரசியல் கைதிகளுடைய விடுதலை முதற்கட்டமாக ஒரு சிறு தொகையினரை யாவது விடுதலை செய்ய வேண்டும்

அத்தோடு அந்த காணி விடயங்களில் அதிக அக்கறை இந்த அரசாங்க செலுத்த வேண்டும் மக்களுடைய அன்றாட பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் நாங்கள் அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்பது தொடர்பில் பரிசீலிக்கலாம்

கடந்த ஆட்சியின் போது அபிவிருத்தி குழு இணைத் தலைவர்களாக பலரை இணைத்து அதில் ஒரு முடிவெடுக்கக்கூடிய நிலை இருக்கவில்லை

இன்று வடக்கு ஆளுநருடைய செயற்பாடு மிகவும் பாரதூரமாக காணப்படுகின்றது ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து வடக்கு ஆளுநர் அலுவலகத்தினால் கடிதம் அனுப்பும் அளவுக்கு நிலைமை காணப்படுகின்றது

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும் இது ஒரு கண் துடைப்புக்கு மக்களை ஏமாற்றுவதற்காக வேண்டி அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும்

இலங்கையினுடைய பொருளாதாரம் என்பது அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும் பொருளாதார பிரச்சனை என்பது வடக்கு கிழக்கு மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம்.

ஆனால் அபிவிருத்தி குழு தலைவர் பதவிகளை நாங்கள் ஏற்பதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றோம்இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் அனைவருடனும் பேசி ஒரு தீர்வினை எடுப்போம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...