” தனியானதொரு அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இது விடயத்தில் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கமாட்டோம்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து தனியாக சென்றுள்ள டலஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார்.
” அதிகாரத்தில் இருப்பவர்கள் அழிந்துபோவதற்கு நான்கு பிரதான காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.
ஒன்று தனி நபர் அதிகாரங்களை குவித்துக்கொள்ளுதல், அடுத்தது அதிகாரத்தை குடும்பமொன்று தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தல், மூன்றாவது திட்டமில்லாமல் அதிகாரத்தை பொறுப்பேற்றல், நான்காவது காரணி ஊழல், மோசடியாகும். ஆட்சிக்கு வந்தது முதல் அரசியலில் இருந்து விரட்டப்படும்வரை சிலர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலைமை மாற வேண்டும். அதனை மாற்றியமைக்கவே நாம் தனியான பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.” – என்றும் டலஸ் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment