“போர் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளை கொண்டுவந்தவன் நான். எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் எனக்கு முதலீடுகளை உள்ளீக்க முடியும். அதனை செய்துகாட்டுவேன்.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரான தம்மிக்க பெரேரா.
“தற்போதுதான் கப்பலில் ஏறியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது வேலையை காட்டுவேன். நாட்டுக்கு நிச்சயம் முதலீடுகளை கொண்டுவருவேன். அதற்கான பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் கடவுச்சீட்டை ஒரு நாளில் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
போர் காலத்தில் இவரே இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment