ச.செல்வேந்திரா தெரிவு இன்று செய்யப்பட்டார்.
இலங்கைசெய்திகள்

சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை

Share

சுயேட்சை வசமாகியது வல்வெட்டித்துறை நகரசபை

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராக சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் தெரிவு நேற்று நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் தெரிவுக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்
டெலோ உறுப்பினர் சதீஸ் மற்றும் சுயேட்சைக் குழு சார்பில் செல்வேந்திரா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில், போட்டியிட்ட டெலோ உறுப்பினர் சதீஸ் 8 வாக்குகளையும், சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா 9 வாக்குகளையும் பெற்றனர்.

இந்த வாக்குகளின் அடிப்படையில் மேலதிக மேலதிக ஒரு வாக்கால் சுயேட்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட செல்வேந்திரா வெற்றி பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் அண்மையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தார். இந்த நிலையில் தவிசாளர் தெரிவுக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு புதிய தவிசாளர் தேர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...