20220818 134149 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மந்திரிமனை மீள்நிர்மாணம் தொடர்பில் அவசர கோரிக்கை!

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள மந்திரிமனை எதிர்வரும் மழைக்காலத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்கிற அச்சம் காணப்படுவதால் அதனை மீள்நிர்மாணம் செய்வதற்கு தேவையான நிதியை பெற செல்வந்தர்களும் புலம்பெயர்ந்தவர்களும் உதவமுன்வர வேண்டுமென யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் அவசர கோரிக்கையை விடுத்தனர்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே யாழ்ப்பாண மரபுரிமை மையத்தினர் இந்த அவசர கோரிக்கையை விடுத்தனர்.

இதில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், தற்போது எமக்குள்ள வசதி வாய்ப்பை மீள்நிர்மாணம் செய்யும் போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றது.

மந்திரிமனையை மீள்நிர்மாணம் செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற தொல்லியல் திணைக்களம் எங்களுக்கு அனுசரணை தந்திருக்கின்றது. இந்த பணியை செய்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றது. அந்தத் தடையை தாண்டி தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியோடு அதனை செய்யவுள்ளோம்.

மரபுரிமை சின்னங்களினுடைய நில உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். நில உரிமையாளர்கள் மரபுரிமை சின்னங்களை அழித்துவிட்டு வேறு பணியை செய்ய முடியாது. மரபுரிமை சின்னங்களினுடைய நிலங்களை. அன்பளிப்பாகவோ அல்லது விலைக்கோ எங்களுக்கு தந்தால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

புனரமைக்க வேண்டிய முந்நூறுக்கும் மேற்பட்ட தொல்லியல் சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரச அனுமதியோடு புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து நிதியை பெறுவதற்கு முயல்வதோடு தனவந்தர்கள் இவ்வாறான பணிகளுக்கு உதவமுன்வர வேண்டும். அரசியல் வேறுபாடின்றி அனைவரும் இதில் பங்கேற்று கைகொடுக்க வேண்டும் – என்றார்.

ஊட சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், மந்திரிமனை அமைந்துள்ள நிலத்தை கொள்வனவு செய்து முற்று முழுதாக மீள்நிர்மாணம் செய்வதாக இருந்தால் 7 கோடி இலங்கை ரூபாய் செலவாகுமென மதிப்பிட்டுள்ளோம். மந்திரிமனை இடிந்துவிழாதவாறு உடனடியாக அதனை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதற்கு 5 மில்லியன் ரூபா தேவைப்படுமென மதிப்பிட்டுள்ளோம்.

செல்வந்தர்கள் மரபுரிமைச் சின்னங்கள் மீது அக்கறை கொண்டவர்கள் இந்தப் பணியில் கைகோர்க்கவேண்டும். செல்வந்தர்களிடமும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகளிடம் அமைப்புகளிடம் நாங்கள் மன்றாட்டமாக கேட்பது இந்த வேலை திட்டங்களை விரைவாக ஆரம்பிக்க உள்ளோம். உங்களால் இயன்ற நிதி உதவிகளை விரைவாக எமக்கு தந்தால் அவற்றை செய்து கொள்ள முடியும் – என்றார்.

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவர் வரலாற்று துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்,
மையத்தின் பதிப்பசிரியர் வ.பார்த்திபன், மையத்தின் உறுப்பினரும் யாழ் மாநகர முதல்வருமான வி.மணிவண்ணன் ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள வரலாற்று சின்னங்களை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்கிற அமைப்பு கடந்த வருடம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...