20220819 123359
இலங்கைசெய்திகள்

UNDCO பணிப்பாளர் யாழுக்கு விஜயம்

Share

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம்(19) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தேன் என டேவிட் மெக்லாக்லன்-கார் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16ம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...